ஒரே படத்தில் இரு வாரிசு நடிகைகளை களமிறக்கிய சுசீந்திரன்

பாக்யராஜ் நடித்த சின்னவீடு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா. நடிகை ஊர்வசியின் சகோதரியான இவர் கடந்த 2015-ல் ‘தோழா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்ற இடத்தில் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவின் ஒரே மகள் ஸ்ரீமயி… தனது கணவருடன் கல்பனா விவாகரத்து பெற்ற பின்னர் தனது மகளுடன் தனது தாயார் வீட்டில் தான் வசித்து வந்தார்.

கல்பனாவின் மறைவுக்கு பிறகு ஸ்ரீமயிக்கு பாட்டியும் அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என சில வருடங்களுக்கு முன் ஒரு பேச்சு அடிபட்டது.

இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள வள்ளிமயில் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீமயி. சொல்லப்போனால் இந்த படத்தின் மூலம் தான் இவர் திரையுலகில் அறிமுகமாகிறார்.

இதேப்போன்று இயக்குனர் அகத்தியனின் மகள்களில் ஒருவரான கனி அகத்தியனும் இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இவர் ஏற்கனவே குக் வித் மோமாளி என்ற டிவி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது நடிகையாக களமிறங்கி உள்ளார். இவரது கணவர் இயக்குனர் திரு ஆவார். இவரது சகோதரிகளான விஜயலட்சுமி, நிரஞ்சனி(கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை) ஆகியோரும் நடிகைகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE