
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் பகாசூரன் படத்தின் முதற்கட்ட படப்பிப்பு நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்திலும் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.