கடந்த 05/06/2022 ஞாயிற்றுக்கிழமை, மாத்தளை காந்தி மண்டபத்தில் பி.ப – 03.00 மணிக்கு இலங்கை கலைஞர்களின் படைப்பான முகை திரைப்படத்தின் அறிமுக நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் – துரை மனோகரன் ( பேராதனை பல்கலைக்கழகம் )அவர்களும்,
கெளரவ விருந்தினர்களாக திரு . ஜனுதீன் – ( பணிப்பாளர் – ஐ டெக் கல்லூரி ,உளவியல் நிபுணர் ,IELTS விரிவுரையாளர்)அவர்களும் திருமதி .ப்ரியமதா பயஸ் ( சுயாதீன ஊடகவியலாளர், எழுத்தாளர், உதவி ஆசிரியர் காலைக்கதிர் பத்திரிகை- யாழ்ப்பாணம் ,வானொலி அறிவிப்பாளர் – நோர்வே தேன்தமிழோசை ,பெண்கள் ,சிறுவர்கள் தொடர்பான சமூக செயற்பாட்டாளர் வடக்கு மாகாணம், )அவர்களும் ,
திரு .B.பாலசுப்பிரமணியம் (அதிபர் – கடுபெல்ல த.வி ), திரு .பெ .மாத்தளை வடிவேலன் (மூத்த எழுத்தாளர் ,இலக்கியவாதி),திரு .மு .சிவஞானம் (மாத்தளை – முன்னாள் மாநகரசபை உறுப்பினர் )அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
திரு .S .கேசவன் – (உரிமையாளர் – கேசவன் டெக்ஸ் ,தலைவர் – சுபீட்ஷம் அமைப்பு )
திரு .S .சிவனேஸ்வரராஜா (அதிபர் – திருவள்ளுவர் தமிழ் மகா வித்தியாலயம் )
திரு .M .ஆறுமுகம் (அதிபர் – விவேகானந்தா த.வி )
திரு .v .சர்வானந்தா (தலைவர் – மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்)
திரு .து .சந்திரசேகரம் (தலைவர் – சைவ மகா சபை -மாத்தளை ) ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
நிகழ்வில் தலைமை உரையை விழா குழு தலைவர் மா .சுரேஷ்குமார் (பணிப்பாளர் ஐ பெக்டா உயர்கல்வி நிறுவனம் ,அகில இலங்கை சமாதான நீதவான் ) வழங்கினார் .
நன்றியுரையை முகை திரைப்பட தயாரிப்பாளர் – N சுபத்திரா S அவர்கள் வழங்கினார் .நிகழ்வில் ஏராளமான மக்கள் ,நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தமையோ குறிப்பிடத்தக்கது.