திருக்கடையூரில் இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா

இசைஞானி இளையராஜா 80 வயதை தொட்டுள்ளதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளையராஜா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. இசைஞானி இளையராஜாவுக்கு 80 வயது துவங்கியதை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி 85 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் பிரபல நடிகர் பிரேம்ஜி, உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இசைஞானி இளையராஜா கஜபூஜை, கோபூஜை செய்து யாகத்தில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE