முதல் கேரள அரசு விருது பெற்ற ரேவதி

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 52வது கேரளா அரசு விருதுகளில் பூதகாலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ரேவதிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் சதாசிவம் என்பவர் இயக்கிய இந்த படத்தில், கணவன் இல்லாமல் ஒற்றை ஆளாக தனது மகனை வளர்க்கும் தாயாக நடித்திருந்தார் ரேவதி.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரேவதி பெரும் முதல் கேரள அரசு விருது இதுதான் கடந்த 1983-ல் மலையாளத்தில் கட்டத்தே கூடு என்கிற படத்தில் அறிமுகமான அதே சமயத்தில்தான் தமிழில் மண்வாசனை என்கிற படத்திலும் அறிமுகமானார் ரேவதி. இத்தனை வருட திரையுலக பயணத்தில் மூன்று தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ள ரேவதிக்கு தனது சிறந்த நடிப்பிற்காக முதல்முறையாக தனது சொந்த ஊரான கேரளாவில், கேரள அரசு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஏதோ ஒருவகையில் தேர்வு குழுவினர் அனைவரின் கவனத்தையும் எனது நடிப்பு கவர்ந்திழுத்து இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இந்த படத்தின் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE