இலங்கை போரியல் வாழ்கை கதையை மையமாக கொண்ட ” முகை- Section 360 ” திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது

இலங்கையை தாயகமாக கொண்ட சுஜன் கிறிஷான் கதாநாயகனாக அறிமுகமாகும் ” முகை- Section 360 ” திரைப்படம் இன்று வெளியிட்டு வைக்கப்படவுள்ளது .

திரைப்படத்தின் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் மற்றும் திரையிடல் 23.05.2022 இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு Le Magic Lantern Preview Theatre and Recording Studio No 30/18, 5ஆவது குறுக்கு தெரு ,லேக் ஏரியா ,நுங்கம்பாக்கம் சென்னையில் இன்று திரையிடலுடன் பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெறுகிறது .

நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட வசன கர்த்தாவும் எழுத்தாளருமான திரு .பாக்கியம் சங்கர் மற்றும் திரைப்பட இயக்குனர் திரு .ஸ்ரீ கணேஷ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் .

இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த சுஜன் கிறிஷான் கதாநாயகனாகவும் ,இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர்.

மிஸ் டிரான்ஸ்குயின் 2021 விருதுபெற்ற திருநங்கை ஷனாவும் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் ப்ரியமதா பயாஸ் இணைவசனம் எழுதி ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடிக்கிறார்.

அத்தோடு மகேஷ் சேதுபதி , முத்துக்குமாரசாமி, காந்தராஜ், அனிதா, விஜய அரவிந்த ஹரி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இசை – ஜோஷ்வா மெல்வின், ஒளிப்பதிவு- டேவிட் பிரேம்குமார்,படத்தொகுப்பு – நாடன் சூர்யா,
கலை – ரவி, மேக்கப்- பாரதி, தயாரிப்பு நிர்வாகம்- தேவி முருகன்

நான் ,மீடியா பெருமையுடன் வழங்கும் “முகை section -360 ” திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் N.சுபத்ரா S .
கதை திரைக்கதை வசனம் பாடல்களுடன் இத் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் RJ நாகா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE