
மந்தா நடிப்பில் ‛சாகுந்தலம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து ஹரி – ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் நடக்கிறது.
இந்த படத்தின் சிறிய முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத். மணிசர்மா இசையமைத்துள்ள இந்த படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட உள்ளனர்.