250 கோடி வசூலைக் கடந்த ‘ஆர்ஆர்ஆர்’

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

‘பீஸ்ட், கேஜிஎப் 2’ என பெரிய படங்கள் வந்தாலும் 25 நாட்களைக் கடந்து இப்படம் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் இப்படம் தற்போது 250 கோடி வசூலைக் கடந்துள்ளது.

ராஜமவுலி இதற்கு முன் இயக்கிய ‘பாகுபலி, பாகுபலி 2’ படங்களும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்தது. தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ மூலம் ஹாட்ரிக் 100 கோடி கிளப் வசூலைத் தொட்டிருக்கிறார் ராஜமவுலி.

இப்படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை 100 கோடிக்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இப்போது அதை விட இரண்டு மடங்கிற்கும் மேல் வசூல் கிடைத்துள்ளது. தெலுங்கிலும் இப்படம் 250 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளது. இந்த வார இறுதி வரையிலும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்றும் அடுத்த வாரம் தான் கூட்டம் குறையும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE