
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து அஜித்தின் 61ஆவது படத்தையும் தயாரித்து வரும் போனிகபூர், உதயநிதி நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி படத்தையும் தயாரித்து வருகிறார். ஹிந்தியில் வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீ-மேக் இது. கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது மே 20ஆம் தேதி உலகமெங்கிலும் நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகும் என்று போனிகபூர் அறிவித்திருக்கிறார். இப்படத்தில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.