
நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் சுற்றுலா தலமாக இருக்கும், நாசர் தலைமையில் 2வது முறையாக சிறப்பாக செயல்படுவோம் என நடிகர் விஷால் பேசினார்.
தேர்தலை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் காவல் துறைக்கும் நன்றி கூறினார். நடிகர் சங்க வரலாற்றிலேயே 3 ஆண்டுகளுன்கு பிறகு தேர்தல் முடிவு வருவது இதுவே முதல் முறை என பேசினார்.