நடிகர் சுதீப் தற்போது நடித்துள்ள விக்ராந்த் ரோனா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கற்பனையும் சாகசங்களும் கலந்து உருவாகியுள்ள இந்த படம் சுதீப் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் சுதீப்புக்கு ரொம்பவே ஸ்பெஷல். அனூப் பந்தாரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் தென்னிந்திய மொழிகள், இந்தி இவற்றோடு இல்லாமல் மொத்தம் 14 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவற்றில் ஆங்கில மொழியில் இந்த படத்திற்கு சுதீப்பே டப்பிங் பேசியுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் வெகுசிலரே தங்களது படத்திற்காக ஆங்கிலத்தில் டப்பிங் பேசியுள்ள நிலையில் கன்னட மொழியில் முதன்முதலாக தனது படத்திற்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் டப்பிங் பேசிய ஹீரோ என்கிற பெருமையையும் இந்த படத்தின் மூலம் சுதீப் பெற்றுள்ளார்.