தமிழில் மாதவன் நடித்த ரன் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி உள்பட பல படங்களில் நடித்தவர் 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார்.
பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் உடல்கட்டை ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டு தற்போது மலையாளத்திலும் சத்தியன் அந்திக்காடு இயக்கியுள்ள மகள் என்ற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அதோடு தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் மீரா ஜாஸ்மின் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இப்போது லோ நெக் பிராக் உடையணிந்து கவர்ச்சிகரமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலானது.