
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார் .
இந்நிலையில் விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மாபெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது .வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது .