கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்கு ஆல்பம் ரிலீஸ்

யு டியுப் பிரபலமாக ஆரம்பித்தபின் பல்வேறு விதமான புதிய விஷயங்கள் சினிமா துறை சார்ந்து நடந்த வருகிறது. குறும்படங்கள் ஒரு காலத்தில் அதிகமாக ஆக்கிரமித்திருந்தது. சமீப காலங்களில் தனி ஆல்பங்கள் புதிது புதிதாக வர ஆரம்பித்துள்ளன. தமிழில் ஏற்கெனவே இது மாதிரியான சில ஆல்பங்கள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.

இருந்தாலும் அம்மாதிரியான ஆல்படங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் அதிகம் நடிப்பதில்லை. ஆனால், தெலுங்கில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ‘காந்தாரி’ என்ற ஆல்பத்தில் நடனமாடி நடித்துள்ளார். அந்த ஆல்பம் இன்று யு டியுபில் வெளியாகியுள்ளது.

ஏஆர் ரகுமானின் இசைக் கல்லூரியில் பயின்ற பவன் இசையமைப்பில், பிருந்தா நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்த ‘காந்தாரி’ ஆல்பம், ஒரு திரைப்படப் பாடல் போல படமாக்கப்பட்டுள்ளது.

“எனது மனதுக்கு நெருக்கமான ஒரு புராஜக்ட், ‘காந்தாரி’, உங்களுக்கு வழங்குகிறோம்,” என கீர்த்தி இந்த ஆல்பம் குறித்து குறிப்பிட்டுள்ளார். கீர்த்தியைத் தொடர்ந்து இனி மற்ற முன்னணி நடிகைகளும் இம்மாதிரியான ஆல்பங்களில் நடிக்க முன்வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE