தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். அவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் கடந்த 2020ம் வருடம் திருமணம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதை வெகு நாட்களுக்குப் பின்னர்தான் அறிவித்தனர். இடையில் காஜல் அகர்வால் பல பழைய புகைப்படங்களைப் பதிவிட்டதால் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்று உறுதியாகத் தெரியாமல் சந்தேகமான செய்திகளையே பலரும் வெளியிட்டார்கள். அறிவிப்பிற்குப் பின்னரும் மீண்டும் பழைய புகைப்படங்களைத்தான் காஜல் பதிவிட்டு வந்தார்.
தற்போது துபாயில் ஓய்வெடுத்து வரும் காஜல் அகர்வால் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய கர்ப்பமான வயிறு தெளிவாகத் தெரிகிறது. அவருடைய தோற்றத்திலும் மாற்றம் தெரிகிறது. அவர் தங்கியுள்ள ஹோட்டல் பால்கனியிலிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “சூரியன் என் முகத்தில் ஒரு மென்மையுடன் தொட்டுச் செல்கிறது,” என்று பதிவிட்டுள்ளார். புகைப்படத்திற்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோல் லைக்குகளைப் பதிவிட்டுள்ளனர்.