நடிகை ரோஜா தற்போது ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது தனது நகரி பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் முதல்வர் முக. ஸ்டாலினின் உருவம் பொறித்து தயாரித்த பட்டு சால்வையை அவருக்கு வழங்கியுள்ளார்.
அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு – ஆந்திர மாநிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் பேசினேன். நான் கூறிய விஷயங்களை கேட்டறிந்த அவர், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார் ரோஜா.