ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் ‘ஆர்சி 15’, அதாவது ராம்சரணின் 15வது படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் நாளை பிப்ரவரி 8 முதல் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் ஆரம்பமாக உள்ளது. அங்கும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படத்தின் முக்கியமான சில காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம்.
ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
ராம்சரண் நடித்து முடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது மீண்டும் அப்படத்திற்கான சில பிரமோஷன்களைச் செய்ய உள்ளார்களாம். அதற்குள்ளாக ‘ஆர்சி 15’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தப் போகிறார்களாம்.