7 வது முறையாக இமானுடன் இணையும் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான். சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் படங்களுக்கு இமான் இசை அமைத்தார்.

இதை தொடர்ந்து தற்போது 7 முறையாக மீண்டும் இணைகிறார்கள். இமானின் பிறந்த நாளில் அவரை சந்தித்து வாழத்து சொன்ன சுசீந்திரன் தனது அடுத்த படத்தை பற்றி அறிவிப்பையும் வெளியிட்டார். அது வருமாறு: பெரிய பட்ஜட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு, மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. இமான் இசை அமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE