தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். இதன் காரணமாக அவர் நடிக்க வேண்டிய படங்கள் அவர் கைவிட்டு செல்கிறது.
ஏற்கெனவே இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நடிக்க வேண்டிய தி கோஸ்ட் படத்திலிருந்தும் விலகிக் கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஜோடியா நடிக்கும் ஆச்சார்யா படத்தில் அவரது பகுதியை நடித்து முடித்து விட்டார்.
இதுதவிர அவர் நடித்து முடித்துள்ள ஹேய் சினாமிகா, பாரீஸ் பாரீஸ், கோஸ்டி, கருங்காப்பியம் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. புதிய படங்கள் எதிலும் ஒப்புக்கொள்ளாத காஜல் அகர்வால் இனி இரண்டு வருடங்களுக்கு பிறகே நடிப்பார் என்று தெரிகிறது.
தி கோஸ்ட் படத்தில் அவருக்கு பதிலாக சோனல் சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பாலிவுட்டில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்தவர் சோனல் சவுகான். தற்போது எப்3: பன் அண்ட் ப்ரஸ்டேஷன் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக தி பவர் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.