விண்வெளியில் ஒலிக்கவுள்ள இளையராஜா இசை

இளையராஜாவின் திரையிசை வரலாற்றில் இன்னொரு சாதனை நிகழ இருக்கிறது. உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட் தயாரிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் அதிக எடையை குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்திருக்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல் இடம்பெற்றுள்ள சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்ப இந்த மாணவர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இளையராஜாவுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் ஸ்ரீராம் நமது நாளிதழக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், ‛இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுமையான முயற்சியாக மாணவர்கள் குழு வடிவமைத்துள்ள சாட்டிலைட்டில் இளையராஜாவின் பாடலை ஒலிக்க செய்ய உள்ளனர். இதற்காக பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் இந்த பாரதம் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்பதையும் உள்ளடக்கிய பாடலை இளையராஜா இசையமைத்துள்ளார். சுவானந்த் கிர்கிரே எழுதிய ஹிந்தி பாடலாக இது உருவாகியுள்ளது. இதனை தமிழிலும் இளையராஜா இசையமைக்க விரும்புகிறார்,’ என்றார்.

இதனையடுத்து இளையராஜாவின் பாடல் விரைவில் விண்வெளியில் ஒலிக்க போகிறது. இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல், நாட்டிற்காக தனது பங்களிப்பாக இருக்கட்டும் என இசையமைத்து கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE