
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா.
இவர், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் தகவல் கூறப்படுகிறது.
நயன்தாரா ஏன் இப்படத்திலிருந்து விலகியுள்ளார் என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் வெளியான விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.