
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த மாதம் வெளியான படம் டாக்டர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், வினய், அர்ச்சனா, தீபா, ரெடின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் திரையரங்களில் வெளியான டாக்டர் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
அதே போல் கடந்த தீபாவளிக்கு சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிலும், இப்படம் TRP-யில் வேட்டையாடியது.
இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகர் விஜய் இருப்பது போல், ரசிகர் ஒருவர் மிகவும் அருமையாகவும், கச்சிதகமாவும் வடிவமைத்துள்ளார்.
இதனை விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ‘டாக்டர் படத்தில் தளபதி விஜய்’ என கூறி பகிர்ந்து வருகிறார்கள்.
ரசிகர்களால் உருவாகியுள்ள இந்த Fan Made புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..