கடந்த சில நாட்களாகவே சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து தகவல் காட்டுத்தீயாய் இணைய ஊடகங்களில் பரவி வந்தன. இதற்கு இரு தரப்பினரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக தெரிவித்தனர்.
4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இவர்களின் திருமண வாழ்க்கை முறிவுக்கு பலரும், குரல் கொடுத்தனர். இந்நிலையில், சமந்த நாகசைதன்யா உண்மையாக பிரிய என்னென்ன காரணம் என்பதை பற்றி பார்ப்போம்..
முதலில், சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல், அடிக்கடி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி சச்சரவு பிளவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அதன்பின்னர், பல படங்களில் வழக்கத்தைவிடவும் கவர்ச்சிகரமாக நடித்தார் சமந்தா.
படுக்கையறைக் காட்சிகளிலும் நடித்தார். ஓடிடி தொடர் ஒன்றில் அவர் நடித்திருந்த விதம் அவருடைய கணவர் குடும்பத்தினருக்கு சிறிதும் பிடிக்கவில்லையாம்.
இதனால், சமந்தாவின் படத் தேர்வுகளில் ஆலோசனை சொல்ல சைதன்யாவின் குடும்பத்தினர் முயன்றிருக்கின்றனர். ஆனால், இதை சமந்தா கொஞ்சமும் விரும்பவில்லை என்பதுடன் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, விருந்து நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சமந்தா ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் சமந்தாவுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நட்பையும் யாரும் விரும்பவில்லை, நாக சைதன்யாவுக்கு முற்றிலுமாகப் பிடிக்கவே இல்லையாம்.
மேலும், நடிகரான நாக சைதன்யா தன்னுடன் நடித்த சில நடிகைகளுடன் நெருக்கமாகப் பழகிவந்ததாகவும் இதை சமந்தா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நட்புகளைக் கைவிடுமாறு சமந்தா தெரிவித்த யோசனைகளை நாக சைதன்யா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக, திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சமந்தா நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
சம்பளமும் குறையாமல் தன்னைவிட பேரும் புகழுமாக இருந்ததையும் நாகசைதன்யாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அடுத்து முக்கிய காரணமாக சமந்தா எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாததும் நாகார்ஜுனா மனைவி அமலாவைப் போல சமந்தாவும் குடும்பத்துடன் இருந்துவிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்ததும்கூட முக்கியமான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.
இவையெல்லாம், இதுவரை வெளியான ஒரு காரணங்கள் தான்… ஆனால் உண்மையில் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்ன என்று அவர்களே தெரிவித்தால் மட்டுமே நம்ப முடியும்,….