உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவினங்களுக்கு நிதியை வழங்குமாறு. நிதி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் தேர்தலுக்கு பணத்தை செலவிடுவதில் நெருக்கடி ஏற்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
பெப்ரவரி மாத தேர்தல் செலவுக்காக 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.