அண்ணனால் உயர்ந்தேன்: ஜெயம் ரவி பெருமிதம்

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய 42வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நான் சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகளாகிறது. எனக்குப் பிறகு வந்தவர்கள் 40, 45 திரைப்படங்கள் நடித்து விட்டனர். ஆனால் நான் 25 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். அதற்கு காரணம் படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, நல்ல திரைப்படங்களை தரமான திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதுதான். இதையே என்னுடைய தந்தை எடிட்டர் மோகனும் கூறினார்.

தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் தோல்வி படங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக கருதுகிறேன். அதுவும் ஜெயம் திரைப்படத்தை முடித்துவிட்டு 8 மாதங்கள் வீட்டில் இருந்தேன். நல்ல படங்களுக்காக காத்திருப்பது தவறில்லை எனவும் கூறினார். என்னுடைய வளர்ச்சிக்கு ரசிகர்களும், செய்தியாளர்களும் பக்க பலமாக உள்ளனர். நான் சினிமாவில் உயர்ந்ததற்கு எனது அண்ணன் மோகன் ராஜாதான் காரணம்.

எந்த விமர்சனமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் இருக்கிறது. அதன் காரணமாக என்னுடைய திரைப்படங்களில் இருக்கும் நல்ல விஷயம் மற்றும் தவறுகள் என அனைத்தையும் சுட்டிக் காட்டுங்கள். என்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் மோகன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE