இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இராஜாங்க அமைச்சுக்கென தனியாக நிதி ஒதுக்கப்படாது.
இராஜாங்க அமைச்சர்கள் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நிரந்தர அமைச்சரவை நியமனத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவினால் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள சிலரின் பெயர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பே இந்த அமைச்சரவை நியமனத்தில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போதைய 18 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இல்லை எனவும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே அமைச்சரவையில் இணைவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.