இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அனைவரையும் மீண்டும் உடனடியாக அந்நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் ரியோடோரோ லொக்ஸின் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் நாட்டிற்குத் திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மேற்கோள் காட்டி மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகள் எவரேனும் மீண்டும் தமது நாட்டிற்குச்செல்ல விரும்பினால் +94 114322267, +94 114322268, +94 112307162 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ கொழும்பிலுள்ள பிலிப்பைன்ஸ் கொன்சியூலர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளமுடியும்.
அவ்வாறில்லாவிட்டால் +88 01735349427 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ டாக்கா நகரிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தைத் தொடர்புகொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.