விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நயன்தாரா நடிக்கும் லயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கும் விஜய், அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார். அந்தப் படத்தை முடித்ததும் மீண்டும் அட்லியுடன் இணைய போவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தில் பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் என்ற அப்பா கேரக்டரை பிரதானப்படுத்திய ஒரு கதையை அட்லி தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அப்படத்திற்கு ராயப்பன் அல்லது பிகில் – 2 என்று டைட்டில் வைப்பதற்கு விஜய்யும், அட்லியும் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.