லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுமிதா அந்நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டு பாதியிலேயே வெளியேறினார். மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அவரது கணவர் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அதையடுத்து சினிமா வட்டாரத்தை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.