![இலங்கையர்கள் பலருக்கு சிவப்பு எச்சரிக்கை!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/03/1-aaf.jpg?fit=800%2C537&ssl=1)
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 132க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸ் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிப்போர் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய அதிகளவிலானோர் நாட்டிலிருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் மறைந்து வாழ்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம், துபாய் போன்ற நாடுகளிலேயே மறைந்து வாழ்வதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர்கள் தொடர்பில் தற்போது விசேட விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.