100 நாள் நடை நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பம்

இன்று மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளும் , தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் விளையாட்டுக் கழகங்களை சேர்ந்தவர்களும் இணைந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள மனிதநேய நடையை ஆரம்பித்து வைத்தார்கள்.

மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் பெரும் நோக்கோடு நடாத்தப்படுகின்ற Tamil Para Sports விளையாட்டு நிகழ்வு இந்த வருடம் ஓகஸ்ட் 20 ஆம் திகதி மட்டக்களப்பில் நடக்க இருக்கின்றது. அதனை முன்னிட்டு இந்த நடை பயணம் நடக்கின்றது.

நீங்கள் நிர்ணயிக்கும் நடை தூர இலக்கு ஒருநாளைக்கு “10000” அடிகளாகவோ “5000” அடிகளாகவோ “3000” அடிகளாகவோ இருக்கலாம், அந்த இலக்கை அடைய 100 நாட்கள் தொடர்ந்து நடக்கும் சவாலான மனித நேய நடையை (Charity Walk இல்) DATA Charity கடந்த வருடத்தில் இருந்து நடாத்தி வருகின்றது. இந்த நடை பயணத்தில் யாரும் இணைந்து கொள்ளலாம். நீங்களே உங்கள் நடையின் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர் 100 நாட்கள் நடக்க வேண்டும்.

இந்த நடையின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு சின்னாஸ்பத்திரி சந்தியிலிருந்து Tamil Para Sports எனும் மாபெரும் நிகழ்வு நடைபெற இருக்கின்ற வெபர் மைதானத்தில் நிறைவு பெற்றது.

Tamil Para Sports 2022 மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார முயற்சிக்கு உதவுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு நிதி திரட்டல் இந்த நடையில் ஒரு அங்கமாக இருக்கிறது.

இங்கு நாம் நமக்காகவும் நடக்கின்றோம் எமது மண்ணில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் நடக்கின்றோம். இது குறித்தான மேலதிக தகவல்கள் Tamiparasports எனும் முகப்புத்தகத்தில் காணமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE