இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று இதன்போது உறுதியளித்துள்ளார்.
இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.