இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசிய,ஆபிரிக்க நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவு வழங்கியது எனவும்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டியாதாகவும்,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை கடுமையான முரண்பாடுகள் மற்றும் பலவீனங்களைக் காட்டுவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.