ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்ட் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்ட் பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நேற்று கூறியது.
விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷியாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.
இதேபோல், உக்ரைன் மீதான ரஷிய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர்கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.