எம்பிலிபிட்டி கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார்கூட்டுத் திட்டத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில்,தேசிய கடதாசி நிறுவனம் மற்றும் korean spa packaging தனியார் நிறுவனம் இணைந்து உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
2012 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ள எம்பிலிபிட்டி கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கை நிபந்தனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.