எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பினாலும் தமது தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இன்மை காரணமாக வெதுப்பக உற்பத்திகளை வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.