பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகுதிகளிலும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பிரமணியம் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கட்சியின் பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்