இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் 48 ஆவது அமர்வு நேற்றைய தினம் காலை 9 மணிக்கு சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பிடி.பி) பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து ஜெயரூபனால் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய பிரேணையொன்று சபைக்கு கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணை சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய பிரேரணையை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதேச சபையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.