தந்தையின் வாழ்க்கையை படமாக்கும் தீபிகா படுகோனே

சர்வதேச பேட்மிட்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தான் தீபிகா படுகோனே. பிரகாஷ் படுகோனே பல சர்வதேச பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்றிருக்கிறார். இந்திய அரசின் அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள அவர் தற்போது ஒலிம்பிக் கமிட்டியில் இருக்கிறார்.

தீபிகாவும் அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கணை தான். பொழுதுபோக்கிற்காக மாடலிங் துறையில் நுழைந்தவர் அப்படியே சினிமா நடிகை ஆகிவிட்டார். பாலிவுட் மட்டுல்லாது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த கெஹரையன் படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை 83 என்ற திரைப்படமாக தயாரானது. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் தீபிகா. இப்போது தனது தந்தையின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்வதற்கு முன்பே என் தந்தை விளையாட்டு துறையில் இந்தியாவின் பெயரை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்தவர். எந்த வசதியும் இல்லாமல் பயிற்சி பெற்று சர்வேதச அளவில் உயர்ந்தவர். பேட்மிட்டன் மைதானம்கூட கிடைக்காமல் காலியாக இருக்கும் திருமண மண்டபங்களில் பயிற்சி மேற்கொண்டார்.

இப்போது இருக்கும் வசதிகள் அப்போது இருந்திருந்தால் என் தந்தையின் சாதனை உலக அளவில் பேசப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சியை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி இருக்கிறேன். என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE