உலக அமைதி மற்றும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி புத்த பிக்குகள் தாய்லாந்தில் 10 லட்சம் தீபங்களை ஏற்றி தியானம் செய்தனர். தாய்லாந்தில் மக்கா புச்சா என்ற புத்த மத விழா மிகவும் பிரபலமானது.
கவுதம புத்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பேங்காக்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் பல்வேறு நாடுகளில் இருந்து புத்த பிக்குகள் ஒரே நேரத்தில் காணொலி மூலம் பங்கேற்று வழிபட்டனர்.
தீப ஒளி திருவிழாவில் சுமார் 10 லட்சம் தீபங்களை ஏற்றி புத்த பிக்குகள் பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த புத்த பிக்குகள் மெய் நிகர் வழியே ஒரே நேரத்தில் பங்கேற்று தியானத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான புத்த துறவிகள் கூட்டாக தியானத்தில் உலக அமைதிக்காகவும், கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபடவும் வழிபாடு செய்தனர்.