நாட்டின் மேலும் பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மின்சாரம் விநியோகம், வைத்தியசாலைகள் நோயாளர் பராமரிப்பு, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் உபசரிப்பு போஷாக்கு ஆகியன தொடர்பிலான முக்கிய சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.