மலையாளம் மற்றும் அரபு என இரு மொழிப்படமாக உருவாகி வரும் ஆயிஷா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். அறிமுக இயக்குனரான ஆமிர் பள்ளிக்கல் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். முதன்முறையாக மலையாளம் மற்றும் அரபு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்தப்படம் இந்திய அரபு நாடுகளின் கூட்டு தயாரிப்பாக உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் தற்போது நடன இயக்குனராக பிரபுதேவாவும் இணைந்துள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைக்கிறார் பிரபுதேவா. இந்த நடன ரிகர்சலின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சு வாரியார், கனவு நனவான தருணம் என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.