வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு நாளை துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது.
அதனால் தற்போது அவர் துபாய் சென்றிருப்பதோடு தனது பிறந்த நாளையும் அங்குதான் கொண்டாடப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டு உள்ளார். இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் துபாய் அரசின் இந்த கோல்டன் விசாவை இந்திய சினிமாவில் இருந்து மோகன்லால், மம்மூட்டி, சஞ்சய் தத், பார்த்திபன், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால், மீரா ஜாஸ்மின், உள்பட பலர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.