2021 கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதி முறைகளை மீறி எவரேனும் செயற்படுவாராயின் அது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, காவற்துறை தலைமையகத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2021 கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் பெப்ரவரி 7 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.