மத்திய அதிவேக வீதியூடாக கொழும்பிலிருந்து கண்டி மற்றும் கொழும்பிலிருந்து குருணாகல் வரையிலான புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க, கொழும்பிலிருந்து குருணாகலுக்கான பஸ் கட்டணம் 390 ரூபாவாகவும் , கொழும்பிலிருந்து கண்டிக்கான பஸ் கட்டணம் 500 ரூபாவாகும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.