இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மெய் நிகர் ஊடாக இன்று இடம்பெற்ற இந்த கலந்துயாடலில் மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.