எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்காக, நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றைய தினம் வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டில், நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதன்படி, மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில், இரண்டு காலப்பகுதிக்கு அவசியமான ஒளடதங்கள் குறித்து கணக்கிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்