பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.