இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை, இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால், இலங்கை வாழ் மக்களுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் மாத்திரமன்றி, எரிவாயு, எரிபொருள், மருந்து வகைகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.