உலகில் 12 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் தென் பிராந்தியத்தில் முதலில் கண்டறியப்பட்ட வீரியம் கொண்ட கோவிட் வைரஸின் இந்த புதிய திரிபு தொற்றிய நபர்கள் அதிகளவான ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் மாத்திரம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2012 நவம்பர் 28ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரம்
- கனடா – 02
- டென்மார்க் – 02
- நெதர்லாந்து – 13
- ஜேர்மனி – 03
- பிரித்தானியா – 02
- இத்தாலி – 01
- பெல்ஜியம் – 01
- அவுஸ்திரேலியா – 03
- ஹொங்கொங் – 02
- இஸ்ரேல் – 01
- போஸ்வானா – 01
இதேவேளை தென் ஆபிரிக்காவில் 100க்கும் குறைவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.